வவுனியாவில், இருவேறு பாடசாலைகளுக்கு இன்னிசை வாத்தியக்கருவிகள்(காணொளி)

416 0

வவுனியாவில், இருவேறு பாடசாலைகளுக்கு யாழ். இந்திய துணைத்தூதுவராலயத்தினால் இன்னிசை வாத்தியக்கருவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் கனகராயன்குளம் மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கே இன்னிசை வாத்தியக் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 9 ஆம் திகதி வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் நுழைவாயில் திறப்பு விழாவிற்கு, பிரதம அதிதியாக கலந்துகொண்ட யாழ்.இந்திய துணைத்தூதுவரிடம், பாடசாலை அதிபர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இன்னிசை வாத்தியக் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இன்னிசை வாத்தியக் கருவிகள் இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜனால், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் அதிபர் பா.கமலேஸ்வரியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.