சமாதான நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்

148 0

பலஸ்தீன், இஸ்ரேல் பிரச்சினையை எமது சகோதரர்களின் பிரச்சினையாக கருத்திற்கொண்டு, சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் இந்த விரிசலை விரைவாக சமாதான நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் நிராேஷன் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற பலஸ்தீன் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உலக நாடுகளில்  வல்லரச நாடுகள் மனித உரிமை மீறல் விடயத்தில் ஒவ்வொரு நாட்டுக்கும் எதிராக வெவ்வேறு நிலைப்பாட்டைய  பின்பற்றி வருகின்றன.

அதனால் ஐக்கிய நாடுகள் சபை உட்பட மனித உரிமை மீறல்களை பாதுகாக்க பல்வேறு பொறிமுறைகள் இருந்தாலும் அவை சில வல்லரச சக்திகளின் பலத்தால் செயலிழக்கப்படும் நிலையே நாங்கள் காண்கிறோம்.

1993இல் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் நான் கல்வி கற்றுவந்த காலத்தில் அன்றைய ஜனாதிபதி பில்கிளின்டன் பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்து.

அன்றை இஸ்ரேல் பிரதமர் மற்றும் யாசீர் அரபாத் ஆகிய இருவரையும் கைலாகு கொடுக்கச்செய்து நடவடிக்கை எடுத்தார். அதன்போது இந்த பிரச்சினை அன்றுடன் முடிவடையும் என்றே நான் நினைத்தேன்.

ஆனால் 30 வருடங்களுக்கு பின்னர் இன்று இந்த சபையில் பலஸ்தீன் மக்களின் விடுதலைக்காக பேச வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது குறித்து கவலையடைகிறேன்.

அத்துடன் மத ரீதியில் கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒரே இறைவனை நம்பி்க்கை கொள்ளும் நிலையே இப்ராஹிம் தூதுவரின் காலத்தில் இருந்து வந்தது. அந்த வரலாறு இருக்கிறது.

இறைவனின் உருவம் தொடர்பாக எ்ங்களுக்கிடையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் கலாசார ரீதியில் நாங்கள் பிரிந்து இருந்தாலும்  இந்த பிரச்சினையை எமது சகோதரர்களின் பிரச்சினையாக கருத்திற்கொண்டு, சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் இந்த விரிசலை விரைவாக சமாதான நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று பலஸ்தீன் மக்கள் மிக நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் அநீதிகளை நிறுத்தி முன்னுக்கு கொண்டுசெல்லும் பிரேரணையை எமது பாராளுமன்றம் கொண்டுவந்து அந்த பிரேரணையை வழிமொவதுடன் அதன் பிரகாரம் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டு என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.