வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் தரம் குறைந்த மருந்துகளை உடனடியாக அகற்ற வேண்டும்

143 0

தரம் குறைந்த மற்றும் பதிவு செய்யப்படாத மருந்து பொருட்கள் நாட்டில் பல வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக கடந்த காலங்களில் பல உயிர்கள் பலியான சம்பவம் தொடர்பாக அரசாங்கம் கூறும் பதில் என்ன என கேட்கிறேன்.

அத்துடன் தேசிய  மருந்து  ஆராய்ச்சி நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்ட மருந்து பொருட்கள் சந்தைக்கு விடுக்கப்பட்டிருப்பது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என எதி்ர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செவ்வாய்க்கிழமை (18)  சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் கேள்வி கேட்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தரம் குறைந்த மருந்து பொருட்களை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தனம் குறைந்த மருந்து மூலம் தனது மடியை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரம் குறைந்த மருந்து காரணமாக நாட்டில் பல வைத்தியசாலைகளில் பல உயிர்கள் வீணாக பலியாகி இருக்கின்றன. குறிப்பாக பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற பெண் மயக்க மருந்து ஏற்றதன் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அதேபோன்று ராகம, கொழும்பு கண்வைத்தியசாலை நுவரெலியா வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்து காரணமாக உயிர் பழி ஏற்பட்டிருக்கிறது.

அதேபோன்று பலர் இந்த மருந்து காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி இருப்பதாக தெரியவருகிறது. நாட்டின் பல வைத்தியசாலைகளில் இவ்வாறு தரமற்ற மருந்து, மற்றும் பதிவு செய்யப்படாத மருந்து வகைகள் விநியாேகிக்கப்பட்டிருப்பது பாரிய பேரழிவை ஏற்படு்த்தக்கூடியதாகும்.

அத்துடன் வைத்தியசாலைகளில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை காரணமாக  உயிரிழக்கும் உயிர்களுக்கான பொறுப்பை சுகாதார அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா? வைத்தியசாலைகளில் இடம்பெறும் குறைபாடுகள், தரம் குறைந்த மருந்துகள் தொடரபாக வெளிப்படுத்துபவர்களை அடக்குவதற்கு சில முயற்சிக்கின்றனர். எமது அரசாங்கத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்.

அதேபோன்று தேசிய மருந்து ஆய்வு நிறுவனம் 3வகையான மருந்துகளை பொருத்தம் இல்லை என நிராகரித்திருந்தன. ஆனால் அந்த மருந்து பொருட்கள் சந்தைக்குக்கு விநியோகிக்கப்பட்டது ஏன் என கேட்கிறேன்.

அதேபோன்று வைத்தியசாலைகளில் பல வைத்திய உபகரணங்களுக்கு பற்றாக்குறை இருந்து வருகிறது. புற்றுநோயாளர்களுக்கான கதிர்வீச்சு இயந்திரம் இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் போன்ற உபகரணங்கள் இல்லாமல் இருக்கிறன.

மேலும் ஜனவரி 29ஆம் திகதி தரம் குறைந்த மருந்து என உறுதிப்படுத்தப்பட்ட மருந்து பொருட்கள் கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதியே பொருத்தமில்லாத மருந்துவகைகளை அகற்றுமாறு வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால் அதற்கு இடைப்பட்ட காலத்தில் அந்த மருந்து பொருட்களை பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் எடுக்கும் நடவக்கை என்ன என கேட்கிறேன் என்றார்.