வடக்கு மாகாண சபையில் குழப்பம்..(காணொளி)

280 0

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 2015ஆம் ஆண்டுக்குரிய தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்த பிரேரனையை இன்றையதினம் மாற்ற முற்பட்ட போது சபையில் குழப்பம் ஏற்பட்டது.

2015ஆம் ஜெனிவா தீர்மானம் தொடர்பான விசேட அமர்வு இன்றையதினம் அவைத்தலைவர் சீ.கே.சிவஞானத்தின் தலைமையில் நடைபெற்ற போது

எம்.கே.சிவாஜிலிங்கம் தனது பிரேரனையை மாற்றி சபையில் சமர்ப்பிக்க முற்பட்ட போது ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சபையில் எதிர்ப்பு வெளிக்காட்டப்பட்டது.

இதன் காரணமாக எதிர்க்கட்சி உறுப்பினர் வைத்தியலிங்கம் தவநாதன் பிரேரனையை சபையில் கிழித்தெறிந்தார்.

இதன் பின்னர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் முதலில் கொண்டுவரப்பட்ட பிரேரனை வழிமொழியப்பட்டு, விவாதிக்கப்பட்டு, சொற்பதங்கள் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு  சபையினால் எதிர்ப்புக்களும் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.