3 வயது குழந்தையின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு வயது சகோதரி பலி

130 0
3 வயது குழந்தையொன்றின் துப்பாக்கிப் பிரயோகத்தில் அக்குழந்தையின்  சகோதரியான ஒரு வயதான குழந்தை உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

சன் டியாகோ கவுன்ரியில் திங்கட்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை 3 வயதான குழந்தை எடுத்து, தற்செயலாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரியவந்துள்ளது.

ஒரு வயதான குழந்தை தலைமையில் காயமடைந்த நிலையில், தீயணைப்புப் படையினர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அக்குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.