இந்த வைத்தியசாலையில் 5 வைத்தியர்கள் இருந்தும் அவர்களில் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் மற்றவர் பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ளார். ஏனைய இரண்டு வைத்தியர்கள் நோய்வாய்ப்பட்டு விடுமுறையில் உள்ளனர்.
இதேவேளை, 9 நாட்களாக இரவும் பகலும் தொடர்ச்சியாக நான்கு வைத்தியர்களின் சேவையை மேற்கொண்ட பிரதம வைத்தியர் ரஞ்சித் திஸாநாயக்கவும் சுகவீனமடைந்து நேற்று (16) நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் வெளிநோயாளிகள் பிரிவில் மட்டும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் உள்நோயாளிகளுக்கான சிகிச்சையை நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் களுத்துறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில், இந்த வைத்தியசாலையில் உள்நோயாளிகளுக்கான சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

