தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதியின்றி நுழைந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை மத்துகம வீதியில் இருந்து வந்த சந்தேகநபர், தொடங்கொடை அதிவேக நுழைவு வீதியில் மாத்தறை நோக்கிய ஒழுங்கையில் பிரவேசித்து, வெலிப்பன்ன நோக்கி செல்ல முற்பட்ட போது, பொலிஸ் அதிகாரிகள் அவரை பின்தொடர்ந்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது சந்தேக நபர் அதிகளவில் மது அருந்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் மின்சார ஊழியர் என தொியவந்துள்ளது.
சந்தேக நபர் மத்துகம நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக தொடங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த வாகனம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது.

