தடுப்பூசி போடப்பட்ட நிலையில் சுகவீனமடைந்ததாக கூறப்பட்டும் நான்கு மாத பெண் குழந்தையொன்று ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்துள்ளதாக குளியாபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
குளியாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல கொமுவ பிரதேசத்தைச் சேரந்த டபிள்யூ.எஸ்.நிம்னாதி திஸாநாயக்க என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
வாயில் இருந்து சளி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 15ஆம் திகதி ஹெட்டிபொல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் குறித்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும் மறுநாள் குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்டதாகவும் குழந்தையின் தந்தை தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குழந்தையின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

