ஐ.தே.கவின் அடுத்த தலைவரை தெரிவுசெய்ய தலைமைத்துவ குழுவை நியமித்த ஜனாதிபதி ரணில்

184 0

ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைவரை தெரிவுசெய்யும் வகையிலும் எதிர்காலத்துக்கான தலைவர்களை உருவாக்கும் நோக்கிலும் ‘உயர் பதவிகளுக்கான தலைமைத்துவ குழுவை’ ஸ்தாபிக்க ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்துக்கு அமைவாக இந்த குழு நியமிக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியில் இரண்டாம் நிலை தலைவர்களை உருவாக்கும் வகையில் ‘உயர் பதவிகளுக்கான குழு’  செயல்படும். கட்சியின் சிரேஷட உறுப்பினர்களின் ஆலோசணைகளுக்கு அமைவாக இளம் தலைவர்களை உருவாக்கும் செயல்பாடுகளில் குறித்த குழு செயல்படவுள்ளது.

அதே போன்று ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைவர் குறித்த தெரிவுகளில் அநாவசியமான பிரச்சினைகள் ஏற்படாதவாறு கட்சியின் ‘உயர் பதவிகளுக்கான தலைமத்துவ குழு’ செயல்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் சம அதிகாரங்களுடன் ஸ்தாபிக்கப்படும் இந்த குழுவினால் ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைவரை தெரிவுசெய்ய முடிவதுடன், உண்மையான தலைமைத்துவங்களுக்கு வாய்ப்பு கிடைத்து ஏனையவர்கள் பின்தள்ளப்படுவார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்தின் போது ‘உயர் பதவிகளுக்கான தலைமத்துவ குழுவை’ அங்கீகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.