வாகன விபத்துக்களால் நாட்டில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

138 0

நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 1,135 வாகன விபத்துக்களில் சுமார் 1,202 பேர் உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 29,871 பேருக்கும், சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய 15,754 பேருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.