அவுஸ்திரேலியாவில் அடிலெய்டில் பொலிஸார் மீது கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் சுட்டுக்கொலை

144 0
image
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில்  இடம்பெற்ற சம்பவமொன்றில் இரு பொலிஸார் கத்திக்குத்திற்குள்ளாகியுள்ள அதேவேளை நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மிகவும் ஆபத்தான சம்பவம் ஒன்று குறித்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது.

.அவுஸ்திரேலியாவின் அடிலெய்டின் வடகிழக்கில் மிகவும் ஆபத்தான சம்பவமொன்றை தொடர்ந்து ஆயுதமேந்திய பொலிஸார் அந்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்

Campbelltown,பகுதியை சுற்றிவளைத்துள்ள பொலிஸார் பொதுமக்களை அந்த பகுதியை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.