தலைகீழாக கவிழ்ந்த பேருந்து! பதற வைக்கும் காட்சிகள்

169 0

கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்தின் போது பதிவான சி.சி.ரி.வி காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

பேருந்து செல்லும் திசைக்கு எதிரில் வந்த சிறிய ரக வாகனமொன்றில் மோதுவதை தடுப்பதற்கு பேருந்து சாரதி மேற்கொண்ட முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து குடைசாய்ந்துள்ளது.

இதன்போது அங்கிருந்த மக்களின் உதவியுடன் பேருந்தில் பயணித்த பயணிகளை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்புக்கும் பதுளைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

தெமோதர நீர் வழங்கல் சபைக்கு அருகில் இந்த விபத்து இன்று(15.07.2023) இடம்பெற்றுள்ளது.

பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இந்த பேருந்தில் சுமார் 25 பயணிகள் பயணித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.