ஜேர்மன் தலைநகர் பெர்லினில் பொது நீச்சல் குளங்களில் குளிக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.இனி பொது நீச்சல் குளங்களை பயன்படுத்துவோர், முன்கூட்டியே ஒன்லைனில் டிக்கெட்கள் வாங்கவேண்டும். அத்துடன், நீச்சல் குளங்களுக்கு வரும்போது, நுழைவாயிலில் அடையாள அட்டையையும் காட்டவேண்டியிருக்கும்.
Neukölln மற்றும் Kreuzberg பகுதிகளில் இருக்கும் நீச்சல் குளங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதுடன், அங்கு CCTV கமெராவும் பொருத்தப்படும் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

என்ன காரணம்?
இப்படி திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு, நீச்சல் குளங்களில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடுவதுதான் காரணம்.
கடந்த வார இறுதியில், Neuköllnஇல் அமைந்துள்ள நீச்சல் குளம் ஒன்றில் 50 இளைஞர்கள் சண்டையிட்டுக்கொண்டார்கள். தற்போது அந்த நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளது.

ஆகவேதான் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

