கல்கிஸ்ஸ பகுதியில் மூன்று பெண்கள் கைது!

198 0

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ காலி வீதி பகுதியில் உள்ள குறித்த இடத்தை நேற்று மாலை கல்கிஸ்ங பொலிசார் சுற்றிவளைத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27, 41 மற்றும் 67 வயதுடைய பயாகல, நொச்சியாகம மற்றும் கடவட பிரதேசங்களைச் சேர்ந்தவர்ந்த பெண்களாவர்.

அவர்கள் இன்று (14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.