சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்கள் கைது

493 0

திருகோணமலை கோனேஸ்வர கடற்பரப்பில் சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்களை கடற்படையினர் கைது செய்து மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம்  நேற்று மாலை  மாலை 6 மணியளவில்  ஒப்படைத்துள்ளதாக மீன்பிடி திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் ஈ.எம்.சி.போயகொட தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 7 பேரையும் பினையில் செல்ல அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் 23ம் திகதி திருகோணமலை நீதிமன்றத்திற்கு காலை 9 மணிக்கு சமூகமளிக்குமாறும் உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை அதிகளவிலாள மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டுவருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கடற்படையினரின் உதவியுடன் கைது செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.