கராத்தே போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனைக்கு கௌரவிப்பு

206 0

இந்தியாவில் புதுடில்லியில் சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவி தவராச சானுயாவிற்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு நேற்று (12.07.2023) இடம்பெற்றுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பதில் தூதுவர் குறித்த மாணவியை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துடன், சாதனை படைத்த மாணவியை மதிப்பளித்தார்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பதில் தூதுவர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.