நோபல் ப்ரிக்ஸ், உதயநிதி அறக்கட்டளைக்கு ஒரே முகவரி – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி

157 0

நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே முகவரியில் எப்படி இயங்குகிறது? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தினமும் ரூ.15 லட்சம்… ரூ.15 லட்சம் என்று சொல்லாத ஒன்றை சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன். ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், ரூ.30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த திமுகவின் வாரிசுக்கு ஒரு கேள்வி.

இந்த கேள்விக்கு அவர் சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும். ரூ.1000 கோடி ஊழலுக்கு பேர் போன, துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான, நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே முகவரியில் எப்படி இயங்கி வருகிறது? இதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.