இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடவுள்ளது.
இந்தத் தகவலை ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
கேள்வி பத்திர நடைமுறையின் கீழ் குறைந்த விலையை சமர்ப்பித்த இலங்கை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு, இலத்திரனியல் அடையாள அட்டை வெளியிடும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஒரு அடையாள அட்டைக்கு 71.83 ரூபாய் வரையில் செலவிடப்படுகின்றது.
சர்வதேச ரீதியாக 500 மில்லியன் அடையாள அட்டை வெளியிட்ட மற்றும், ஹங்கேரிய நாட்டவர்களுக்கு அடையாள அட்டை வெளியிட்ட நிறுவனத்தின் முதன்மை நிறுவனம் இதுவாகும்.
இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் தேசிய அடையாள அட்டை வெளியிடுவதற்காக 65 ரூபாய் செலவிடப்படுகிறது. இந்நிலையில் இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பெரிய அளவிலான பணம் செலவிட நேரிடும் என ஆணையாளர்
பாலிகார்பனேட் அட்டையினால் தயாரிக்கப்படும் இந்த இலத்திரனியல் அடையாள அட்டையை 10 வருடங்கள் மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

