அம்பாந்தோட்டையில் வாள்வெட்டு!

148 0

அம்பாந்தோட்டையில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றதை அடுத்து, குறித்த நபர் மீது வாளால் தாக்குதல் மேற்கொண்டு சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

அம்பாந்தோட்டை, பந்தகிரிய பிரதேசத்தில் சொகுசு காரில் வந்த இருவர் நேற்று (11.07.2023) 44 வயதுடைய நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம் தோல்வியடைந்ததால் சந்தேக நபர்கள் காயமடைந்த நபரை தரையில் தள்ளிவிட்டு வாளால் தலையில் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய வெள்ளை நிற சொகுசு கார் லுனுகம்வெஹர பகுதியில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.