தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்ப கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காலியில் இருந்து சுமார் 431 கடல் மைல் தொலைவில் இலங்கைக்கு தென்மேற்கே ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மீனவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த மீனவர் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஐந்து மீனவர்களுடன் ‘சசிந்த புதா’ என்ற நெடுநாள் மீன்பிடி படகு கடலுக்கு சென்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.
காலியிலிருந்து இலங்கையின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஆழ்கடலில் வெளிநாட்டு படகு ஒன்றும் குறித்த நெடுநாள் படகும் மோதி விபத்து ஏற்பட்டது.
இதன்போது அந்த வெளிநாட்டு படகில் இருந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையின் நெடுநாள் படகில் இருந்த மீனவர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைக்கு அறிவித்துள்ளது.
இதன்படி, கடற்படையின் ‘ஸ்பார் மிரா’ என்ற வணிகக் கப்பல் ஊடாக தீக்காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
சுவிட்சர்லாந்தில் நடக்கவிருக்கும் எதிர்வரும் நிகழ்வுகள்-2026
February 20, 2026 -
பிரான்சில் வன்னிமயில் 2026.
February 18, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

