ஊழல் மோசடிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஒருகாலத்திலும் சம்பந்தப்பட்டதில்லை

68 0

நாட்டின் ஊழல் மோசடிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஒருகாலத்திலும் சம்பந்தப்பட்டதில்லை. கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டுவந்த பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்களும் தற்போது பொய் என உறுதியாகி இருக்கின்றன என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஷல ஜாகொட தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிக்கையிலேயெ இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள்  கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்தனர்.

இந்த நிலைமையை சமாளித்து நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப யாரும் முன்வராத நிலையில் ரணில் விக்ரமசிங்க இந்த சவாலை ஏற்றுக்கொண்டு நாட்டின் ஜனாதிபதியாகி இந்த மாதம்  ஒருவருடம் பூர்த்தியாகிறது.இந்த ஒருவருட காலத்தில் நாட்டின் பொருளாதா நிலையை படிப்படியாக ஸ்திர நிலைக்கு கொணடுவர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பதை மக்கள் கண்கூடாகவே கண்டு வருகின்றனர்.

அத்துடன் உலகில் பணவீக்கத்தில் உயர்த்த தரத்தில் இருந்த எமது நாடு தற்போது அந்த நிலையில் இருந்து கீழ் நிலைக்கு வந்திருக்கிறது. மத்திய வங்கி எதிர்வு கூறும் வகையில், எதிர்வரும் 3மாதங்களில் நாட்டின் பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்துக்கு கொண்டுவரும் திறமை எமக்கு இருக்கிறது.

உலகில் வேறு நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியாமல் போன நிலையில் எமக்கு அந்த உதவியை பெற்றுக்கொள்ள முடியுமாகியது. அதனால் நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகம்கொடுக்கக்கூடிய தலைவராக ரணில் விக்ரமசிங்கவின் பெயர் நாட்டில் உயர்ந்த இடத்தில் பதிவாகும்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்கவை ஏற்றுக்கொள்ளாத பலர் இன்று அவர் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்கிறன்னர். அதனால் இன்று அவர் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பவர்கள் நாளை ஒரு நாளில் அவரை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதனால் அரசியல் தொடர்பில் நன்கு அறிந்தவர்கள் தற்போது தெரிவித்திருக்கும் புதிய அரசியல் சமன்பாடுதான், ஐக்கிய தேசிய கட்சி பூச்சிய நிலைக்கு வீழ்ச்சியடைந்தால் நாடு அந்த நிலைக்கு வீழ்ச்சியடையும் ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் எழும்போது நாடும் மீள கட்டியெழுப்பப்படும் என்பதாகும். அதனால் தற்போது ஐக்கிய தேசிய கட்சியை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்றன. அதேநேரம் நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் நடவடிக்கையும் படிப்படியாக இடம்பெற்று வருகிறது.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டின் ஊழல் மோசடிகளுடன் ஒருபோதும் சம்பந்தப்பட்டதில்லை. கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டு வந்த 10 பில்லியன் ரூபா மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கள் தற்போது பொய்யாகி உள்ளன. என்றாலும் ரணிவ் விக்ரமசிங்க பிணைமுறியில் 12பில்லியன் ரூபாவை மத்திய வங்கியில் வைப்பில் வைத்துக்கொண்டே இந்த நடவடிக்கையை கையாண்டு வந்தார். அதனால் பிணைமுறி மோசடியால் நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் கோத்தாபய ராஜபக்ஷ் அரசாங்கம் வரி விலக்களிப்பின் மூலம் சுமார் 600 பி்ல்லியன் ரூபா நாட்டின் வருமானம் இல்லாமல் போனது.அதன் காரணமாகவே நாடு வங்குராேத்து நிலைக்கு சென்றது. இவ்லாறு வங்குராேத்து அடைந்த நாட்டையே ரணில் விக்ரமசிங்க பொறுப்பெடுத்து தற்போது, நாட்டை வங்குராேத்து நிலையில் இருந்து மீட்டி வருகிறார். இன்னும் சில மாதங்களில் எமது நாடு வங்குராேத்து நிலையில் இருந்து முற்றாக நீங்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதற்கான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்து வருகிறார் என்றார்.