இலங்கையில் கடும் வறட்சி: பட்டினியால் மக்கள் அவதி

252 0

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பட்டினியால் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீர், மற்றும் உணவு பொருட்கள் இன்றி மக்கள் தவிக்கின்றனர்.

இந்த நிலையில் வறட்சி நிலவரம் குறித்து அரசும் உலக உணவு திட்ட துறையும் இணைந்து ஆய்வு நடத்தியது. அதில் இலங்கையில் மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் கடும் வறட்சி நிலவுவது உறுதி செய்யப்பட்டது.மேலும் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரிசி உற்பத்தி குறைந்துள்ளது. வழக்கத்தை விட 63 சதவீதம் உற்பத்தி சரிந்துள்ளது. இதனால் 12 லட்சம் மக்கள் உணவு கிடைக்காமல் பட்டினியால் தவிக்கும் அபாயம் உள்ளது.

அவர்களில் 6 லட்சம் குழந்தைகளும் பட்டினியால் பாதிக்கும் அபாயத்தில் உள்ளனர். வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் தலா 4 லட்சம் மக்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளனர் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.