எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு எதுவும் வழங்கப்படவில்லை என்று சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியதனையடுத்தே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது .
மேலும், இது தொடர்பிலான மனுக்களை எதிர்வரும் ஒக்டோபர் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ தலைமையிலான நான்கு நீதிபதிகள் அடங்கிய குழு முன்னிலையில் இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

