ஸ்பெயினில் கனமழை – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார்கள்

59 0

ஸ்பெயின் ஜராகோசா நகரில் பெய்த கனமழை காரணமாக அந்த நகர மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஸ்பெயினில் ஜராகோசா நகரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக நகரின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் ஏராளமான கார்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளம் காரணமாக பலரும் காரினுள் சிக்கிக் கொண்டனர். இதுவரை எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் காரினுள் சிக்கி கொண்ட மக்களை வெள்ள நீர் அடித்துச் செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.வெள்ளம் காரணமாக பேரழிவை ஜராகோசா சந்திப்பிருப்பதாக அந்நகர வாசிகள் தெரிவித்துள்ளனர்.