மணிப்பூரில் பண பலத்தை வைத்து பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது: இரோம் சர்மிளா

351 0
 மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் இரோம் சர்மிளா. மனித உரிமைக்காக 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து போராடியவர்.இவர் சமீபத்தில் நடந்த மணிப்பூர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். இவருக்கு வெறும் 90 வாக்குகளே கிடைத்ததால் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் ஆசிரம நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெங்களூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு இரோம் சர்மிளா இன்று காலை வந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மணிப்பூர் மாநில மக்கள் வரும் காலங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பண பலத்தை வைத்து பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது. மணிப்பூர் மாநில மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கேரள மக்கள் என்னை எப்போதும் வரவேற்பார்கள். அதனால் அங்குள்ள ஆசிரம நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்கிறேன். கேரளாவில் ஒரு மாதம் தங்க உள்ளேன்.தேர்தல் தோல்விக்கு பிறகு ஏதாவது ஒரு மாநிலத்துக்கு சென்று தங்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி கேரளாவுக்கு செல்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.