வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம்(காணொளி)

351 0

 

வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம், இன்று 19 ஆவது நாளாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தங்களின் போராட்டத்திற்கு நீதி கோரி ஜனாதிபதிக்கு தபாலில் கடிதம் அனுப்பும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்தது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில், கடந்த ஒரு வாரமாக மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட கடிதங்கள் நேற்று வவுனியா மத்திய தபால் நிலையத்தில், அஞ்சல் நிலைய அதிகாரியிடம் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக கையளிக்கப்பட்டது.

இதன் போது ஆயிரம் கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உண்ணாவிரதம் இருக்கும் கொட்டகையிலிருந்து நடை பவனியாக அஞ்சல் நிலையம் வரை சென்ற உண்ணாவிரதிகளும் ஆதரவாளர்களும், தபால் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் கடிதங்களை கையளித்தனர்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கறுப்பு கொடிகளை கட்டி, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.