வவுனியா ஓமந்தையில், இராணுவம் விடுவித்த காணிகளை மக்கள் பார்வையிட்டனர்(காணொளி)

377 0

வவுனியா ஓமந்தையில், இராணுவம் விடுவித்த காணிகளை மக்கள் பார்வையிட்டனர்.

ஒமந்தை சோதனைச்  சாவடியாக இயங்கி வந்த காணிகளை, இராணுவம் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமாரவிடம் கையளித்திருந்தது.

இந் நிலையில் காணிகளுக்கு சொந்தமான மக்கள், தங்கள் காணிகளை அடையாளம் காட்டுவதற்கு நில அளவைத் தி

ணைக்களத்தின் அதிகாரிகளுடன் சென்றிருந்தனர்.

அத்துடன், சட்டப்படி காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட 20 ஏக்கர் காணிகளை, 15 குடும்பங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் பார்வையிட்டதுடன், தங்கள் காணிகளின் எல்லைகள் மற்றும் வீடுகளை கிராம உத்தியோகத்தருக்கு அடையாளம் காட்டியுள்ளனர்.

ஓமந்தை இறம்பைக்குளம் சோதனைச்சாவடி 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள நிலையில், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை தவிர்த்து, அப்பகுதியில் 5.5 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளனர்.