பெண்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி அனைத்து துறைகளிலும் உயர்பதவிகளை வகிக்க வேண்டும்- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

346 0

பெண்கள் தமது திறமைகளை வெளிக்காட்டி அனைத்து துறைகளிலும் உயர்பதவிகளை வகிக்க வேண்டும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற வடக்கு மாகாண முதலமைச்சின் மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பெண்கள் அனைத்து துறைகளிலும் தமது திறமைகளை வெளிக்காட்டுகின்ற போதிலும் அவர்களால் உயர் நிலையை அடைய முடிவதில்லை என்று குறிப்பிட்ட சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர், அந்நிலையினை மாற்றி அனைத்து துறைகளிலும் உயர் நிலைகளை அடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மாற்றத்திற்காக உறுதியாக இரு எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற

நேற்றைய மகளிர் தின நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வடக்கு மாகாண பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன், சாவகச்சேரி பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.