வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் ஆடுகள் விநியோகம்!

64 0
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆடுகளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை விவசாய அமைச்சு ஆரம்பித்துள்ளது.

அதன்படி, ஐந்து வருடங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 70,000 ஆடுகள் விநியோகிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் 10 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் மூன்று ஆடுகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.