தாதியர் பணிப்பகிஷ்கரிப்பு 80 வீதம் தோல்வி- சமன் ரத்னப்பிரிய

270 0

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் 80 வீதமே தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அரச தாதியர் அதிகாரிகளின் சங்கத் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் பேராதெனிய வைத்தியசாலையில் இரண்டு தாதியர் மாத்திரமே இணைந்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஏனைய வைத்தியசாலைகளிலும் இதே நிலையில் தான் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளாத சகல தாதியர்களுக்கும் தமது சங்கம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் உண்மையான சுயரூபம் இந்த போராட்டத்தில் வெளிப்பட்டதாகவும் ரத்னப்பிரிய மேலும் குறிப்பிட்டார்