இந்திய போர் விமானங்கள் பிரான்ஸ் வானில் பறக்க வேண்டும் – பிரான்ஸ் தூதுவர் இம்மானுவேல் லெனைன்

158 0

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி விசேட அழைப்பின் பிரான்ஸுக்குச் செல்லவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மையின் 25வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் அன்றைய தினம் பிரான்ஸில் இந்திய இராணுவ வீரர்களின் அணிவகுப்பு இடம்பெறுவதோடு, வானத்தில் இந்திய ரஃபேல் போர் விமானங்கள் பறக்க வேண்டும் என பிரான்ஸ் தூதுவர் இம்மானுவேல் லெனைன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனைன் மேலும் கூறுகையில்,

இது ஒரு மிக முக்கியமான விஜயமாக இருக்கும். பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தில் இந்தியா கௌரவ விருந்தினராக அங்கம்‍ பெறும் நாடாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கௌரவ விருந்தினர்கள் அழைக்கப்படுவார்கள். இந்த ஆண்டு, பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையேயான மூலோபாய கூட்டாண்மையின் 25வது ஆண்டு விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

மேலும், சுதந்திர தின அணிவகுப்பில் இந்திய படைகள் மற்றும் இந்திய ரஃபேல் போர் விமானங்கள் பிரான்சில் பங்கேற்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

இந்திய பிரதமர் மோடியின் வருகை புதிய இலக்குகளை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய, கலாசார, அறிவியல், கல்வி மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கள் வலுப்பெறும் என்றார்.