போதைப்பொருள் வர்த்தகர் கைது

140 0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த போதைப்பொருள் வர்த்தகரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

வாதுவ, மொரந்துடுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய ஆகிய இடங்களில் நீண்டகாலமாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்த வாதுவை, மொல்லிகொட பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரே இவ்வாறு வாதுவை பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 21 வயதுடைய இளைஞர் எனவும் வாதுவை, மகா விஹாரை வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்படும் போது சந்தேக நபரிடமிருந்து 7 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின்  போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்து நீண்டகாலமாக  போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், அவருக்கு எதிராக  ஹெரோயின் கடத்தல் தொடர்பான நீதிமன்ற வழக்குகள் பல நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். வாதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.