குருணாகல் – தம்புள்ளை வீதி விபத்தில் தம்பதியினர் பலி

170 0

குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ  பகுதியில்  மோட்டார் சைக்கிள்மீது லொறி மோதியதில் இளம் தம்பதியினர்  உயிரிழந்துள்ளதாக தொரடியாவ பொலிஸார் தெரிவித்தனர்.

அமில புஷ்பசிறி (34) மற்றும் அவரது மனைவி  சத்துரராணி  குமாரி (33)  ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (06)  மாலை இடம்பெற்றுள்ளது.

குருணாகல் கட்டுவன மஹிந்த கல்லூரியில் ஆறாம் ஆண்டில் கல்வி கற்கும் தமது ஒரே மகளை அழைத்துச் செல்வதற்காகச் சென்றபோதே தம்பதியினர் இந்த விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

அதிவேகமாக வந்த லொறி ஒன்றே  வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.