பாகிஸ்தானின் லாகூரில் கடும் மழையினால் 7 பேர் பலி

150 0
பாகிஸ்தானின் லாகூர் நகரில் கடும் மழை காரணமாக இன்று புதன்கிழமை குறைந்தபட்சம் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லாகூரில் இன்று 291 மில்லிலீற்றர் மழை பெய்துள்ளது என பஞ்சாப் மாகாணத்தின் பதில் முதலமைச்சர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார். மழை காரணமாக கட்டடங்களின் கூரை இடிந்ததாலும், நீரில் மூழ்கியதாலும் மின்சாரம் தாக்கியதாலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மிக அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என லாகூர் மாநகர ஆணையாளர் முஹம்மத் அலி ரந்தாவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லாகூரின் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்பதற்கு மீட்புக்குழுக்களை ஈடுபடுத்துமாறு பஞ்சாப் மாகாண பதில் முதலமைச்சருக்கு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.