மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள வலையிறவு மடத்துபிள்ளையார் ஆலய உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த ஆலயத்தின் முன்னால் உள்ள உண்டியலை இனம் தெரியாத திருடர்கள் இரும்பு கம்பியால் தாக்கி உடைத்து அதிலிருந்த சுமார் 25 ஆயிரம் ரூபாவுக்கு மேலதிகமான பணத்தை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

