இரண்டு வயது சகோதரனுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தொண்டையில் நாணயம் சிக்கி இரண்டு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவமொன்று திங்கட்கிழமை ( 03) தொம்பே, அஹுகம்மன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சகோதரர்கள் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மூத்த பிள்ளை தனது சகோதரி வாயில் நாணயத்தை திணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறிப்பிட்ட குழந்தையை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மூச்சுக்குழாய் அடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக தடயவியல் நிபுணர் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

