பிரான்சின் தீவிரவலதுசாரி அரசியல்வாதியொருவரின் ஆலோசகர் இந்த நிதியத்தை ஏற்படுத்தியுள்ளார்,இதுவரை குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சார்பில் 963,000 யூரோக்களை அவர் சேகரித்துள்ளார்.
ஜூன் 27 ம் திகதி மேற்குஆபிரிக்க வம்சாவளி இளைஞனான நகெல் அவரது காருக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்,பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன-இதனை தொடர்ந்து பிரான்சில் பெருங்கலவரங்கள் மூண்டுள்ளன.
நகெலை கொலை செய்த பொலிஸ்உத்தியோகத்தருக்கு ஆதரவாக நிதிசேகரிக்கும் நடவடிக்கை தனது மனதை வருத்துகின்றது என நகெலின் பாட்டி தெரிவித்துள்ளார்.

இடதுசாரி அரசியல்வாதிகள் உட்பட பிரான்சின் அரசியல்வாதிகள் நிதிதிரட்டும் நடவடிக்கைகளை கண்டித்துள்ளனர்.
நிதிதிரட்டும் நடவடிக்கை மூலம்ஜீன்மெசிகா நீறுபூத்த நெருப்பை மீண்டும் பற்றவைக்க முயல்கின்றார் இது கலவரங்களை உருவாக்ககூடும்,இளம் நகெலை கொலை செய்தார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஆதரவாக நிதி திரட்டுவது அநாகரீகமான அவதூறான நடவடிக்கை என பிரான்ஸ் ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்த அரசியல்வாதியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி திரட்டும் நடவடிக்கைய முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என பிரான்சின சோசலிச கட்சியின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

