எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழி!

212 0

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழியை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் காரணமாக தாம் கடும் பாதிப்புகளையும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி மல்வத்தை மாநாயக்கரை சந்தித்த பின்னர் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கொழும்பு நகரில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் பொருளாதாரத்திற்கும் கடும் பாதிப்புகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், வாரத்தில் ஒரு முறை மாத்திரமே கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தும் அனுமதி வழங்கும் சட்ட யோசனை ஒன்றை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.