‘அன்பின் பாதையின் எண்ணம் போல் வாழ்க்கை’ கலை, இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளர் சேனையூர் பிரம்மியா சண்முகராஜாவின் கனதி சிறுகதை நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் திங்கட்கிழமை (03.07.2023) காலை 9.30 மணிக்கு திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் எண்ணம் போல் வாழ்க்கை அமைப்பின் தலைவர் கனக.தீபகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திருகோணாமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சூ.பார்த்திபனும், கௌரவ விருந்தினர்களாக மூத்த எழுத்தாளர் கேணிப்பித்தன் ச.அருளானந்தமும், திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் ஆசிரியர் க.ராஜனும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நூலின் வெளியீட்டு உரையை இலக்குமி பிரசுராலய இயக்குனர் கரவை மு.தயாளனும், நூல் விமர்சனத்தை வ.முரளிதரனும் வழங்க, நூல் வெளியீட்டை கவிஞர் ஷெல்லிதாசன் ஆரம்பித்து வைக்க, ஏற்புரையை நூலாசிரியர் வழங்குவார்.

