சூரிய சக்தி மின் உற்பத்தி வாடிக்கையாளர்களுக்கு நிலுவைத் தொகை செலுத்தப்பட்டது

190 0

ஏப்ரல் 30 ஆம் திகதி வரை சூரிய சக்தி மின் உற்பத்தி வாடிக்கையாளர்களுக்கு (solar panel) செலுத்த வேண்டிய 4 பில்லியன் ரூபாய் நிலுவைக் கொடுப்பனவுகளை செலுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 12 மாதங்களாக 4 பில்லியன் ரூபாய் நிலுவையில் இருந்தது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும்,  இலங்கை மின்சார சபை  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழங்குநர்கள், தனிப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் (IPPs) மற்றும் ஏனைய வழங்குநர்களுக்கான மற்றைய அனைத்து கட்டண நிலுவைகளை தொடர்ந்து செலுத்தும் என்றும்,  மாதாந்த கட்டணத் திட்டத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவற்றை முழுமையாக செலுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.