கிளிநொச்சியில் காணாமல் போன உறவுகளை மீட்டுத்தாருங்கள் – உறவுகள் ஆர்ப்பாட்டம்

266 0

கிளிநொச்சியில் காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வலிந்து காணமால்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் அமைந்துள்ள அவர்களது அலுவலகம் முன்பாக முன்னெடுத்துள்ள போராட்டம் வெள்ளிக்கிழமை (30) 2383 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியும் காணாமல் போகச் செய்யப்பட்டோர் குறித்து தீர்க்கமான முடிவொன்றை வழங்குமாறும் வலியுறுத்தி காணாமல் போனோரின் உறவினர்கள் இன்றும் உறுதியான கொள்கையுடன் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளனர்.