தில்லைநாதனை யாழ்.ஊடக அமையம் கெளரவித்தது!

171 0

50 வருடங்களுக்கு மேல் ஊடக பணியாற்றி வரும் தில்லைநாதனை யாழ்.ஊடக அமையம் நேற்று (29) கெளரவித்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தின் ஸ்தாபகர் தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்களான தனபாலசிங்கம், பாரதி உட்பட சிரேஷ்ட ஊடகவியலாளரான நிக்‌ஷன், யாழ்.பல்கலைக்கழக கலைபீட பீடாதிபதி கலாநிதி ரகுராம், போன்றோர் வாழ்த்துரை செய்தனர்.

ஏற்புரையை தில்லைநாதன் நிகழ்த்தினார்.

வடமராட்சி பிரதேச நிருபராக போரிற்கு முன், போர், போரிற்கு பின் என 3 காலப் பகுதிகளில் ஊடக பணியாற்றிய பெருமை இவரை சேரும்.  ஈழநாடு, வீரகேசரி, தினக்குரல், உதயன் பத்திரிகைகளின் வடமராட்சி பிரதேச நிருபராக பணியாற்றினார்.

இன்றைய கால இளம் ஊடகவியலாளர் செய்தி சேகரிப்புக்காக ஒன்று கூடும் போது அங்கே நரைத்த தலை ஒன்று தெரியும் அது தில்லைநாதனுடைய தலை யாகத் தான் தெரியும். அந்தளவுக்கு இன்றும் துடிப்புடன் செயற்படும் நிருபராக விளங்குகிறார்.