கனடாவில் பிரதி அமைச்சராக இலங்கையை பூர்விகமாக கொண்ட பெண் நியமனம்

55 0

இலங்கையை பூர்விகமாக கொண்ட  துஷாரா வில்லியம்ஸ்  கனடா அரசாங்கத்தின் பிரைவி கவுன்சில் அலுவலகத்தில் அரசாங்கங்களுக்கு இடையிலான விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஜூன் 19 ஆம் திகதி முதல்  பிரதி அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர்  துஷாரா வில்லியம்ஸ் கனடா நிதித்துறையின் இணை உதவி துணை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

கனடாவின் பொதுச் சேவையில் இலங்கையை பூர்விகமாக கொண்ட  முதல் பெண் பிரதி அமைச்சராக வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட துஷாரா வில்லியம்ஸ், தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை கொழும்பில் உள்ள மகளிர் கல்லூரியில் பயின்றுள்ளார். பின்னர் 991 இல் கனடாவுக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

அவர் பி.ஏ. சர்வதேச உறவுகள் மற்றும் சர்வதேச அபிவிருத்திகள் தொடர்பான பட்டப்படிப்பு ஆகிய இரண்டு பட்டப்படிப்புக்களையும் கனடாவிலுள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பயின்றுள்ளார்.

தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த  வில்லியம்ஸ் இலங்கையில் உள்ள கொள்கைக் கற்கைகள் நிறுவனத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.

வில்லியம்ஸ் 2001 இல் கனேடிய சிவில் சேவையில் சேர்ந்தார்.

சமூக, பொருளாதாரம் மற்றும் நிதி போன்ற பொதுக் கொள்கைப் பகுதிகளின்  சிவில் சேவையில் பல வருட அனுபவம் என்பன அவர் இந்த நிலையை அடைய காரணமாக இருந்துள்ளது.