திருகோணமலையில் டெங்கு நோயினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை 10.20 மணியளவில் கிண்ணியா 03 பைசல் நகரைச்சேர்ந்த 43 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.இவரின் சகோதரியும் கடந்தகிழமை இதே டெங்கு நோயினால் மரணமானது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நபர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை 6.00 மணி வரை சாதாரண நிலையில் இருந்தவர் என்றும், சுமார் 4 மணித்தியாலத்திற்குள் இம்மரணம் நிகழ்ந்துள்ளது என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

