புத்தளம் மாவட்டத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை புத்தளம் கருத்தரவை மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (29 ) காலை இடம்பெற்றது.

குறித்த பெருநாள் தொழுகை இமாம் மின்ஹாஜ் அவர்களினால் தொழுவிக்கப்பட்டது. பெருநாள் தொழுகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த தொழுகையின் போது பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

