கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

323 0

ஹிக்கடுவ – பட்டுவத பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 1.00 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில், படுகாயங்களுக்கு உள்ளான குறித்த நபர் காரபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் தொடங்துவ பிரதேசத்தை 72 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ காவற்துறை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.