கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளால் இன்றைய தினம்(28.06.2023) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நெல்லுக்கான நிர்ணய விலையை பெற்றுத்தருமாறும் தமது நெல்லை கொள்வனவு செய்யுமாறும் கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினையும் கையளித்துள்ளனர்.

