யாழிலிருந்து பாதயாத்திரை ஆரம்பம்

135 0

அனைத்து இன நல்லிணக்கத்திற்காக மக்கள் ஒருமித்த தேசிய இயக்கத்தின் இணைப்பாளர் சாகர தனஞ்சய கட்டிபே ஆராச்சி யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளார்.

“வடக்கிலிருந்து மேற்கு நோக்கிய நேச பாத யாத்திரைக்கு நீங்களும் ஒன்றிணையுங்கள்” எனும் தொனிப்பொருளில் இந்த யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழ வேண்டுமெனவும், அனைத்து இன மக்களின் வாழ்வும் இனிமையாகும் என்பதே யாத்திரையின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பாத யாத்திரையின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு தமிழ்-சிங்கள-ஆங்கில அகராதி ஒன்றும் இவரால் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஆரம்பமான பாதயாத்திரை முதற்கட்டமாக திருகோணமலையினை சென்றடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery