முறைப்பாடுகளை ஆராய விசேட குழு

140 0

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் தொடர்பில் கிடைக்கும் மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலக மட்டத்தில் இந்த குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இந்த குழுவின் ஊடாக தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான முறைமையை தயாரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும தொடர்பில் மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.