நலன்புரி நிலையங்களில் இருந்தவர்களுக்கு வீடுகள்

245 0

இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 33 குடும்பங்களுக்கு, இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைக்கப்பட்ட வீடுகளின் பெறுமதி 33 மில்லியன் ரூபாய்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

நலன்புரி நிலையங்களில் தங்கிருந்தவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கென இந்த வீடுகள் கையளிக்கப்படவுள்ளன.

இவ்வாறு அமைக்கப்பட்ட வீடுகள் யாழ்ப்பாண பாதுகாப்பு படை தளபதி, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கான வீடமைப்பு பணிகள், வான்படை மற்றும் கடற்படையின் ஒத்துழைப்புடன் தொடரும் எனவும் யாழ்ப்பாண பாதுகாப்பு படை தளபதி இதன் போது குறிப்பிட்டார்.